டோக்கனில் எந்ததேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே நிவாரண தொகை பெறலாம்; அரசு திடீர் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Dec 20, 2023, 12:42 PM IST
Highlights

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைக்காக வழங்கப்பட்ட விநியோகிக்கப்பட்ட டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே நிவாரணத் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் வகையில் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் அடிப்படையில் தேதி குறிப்பிட்டு நியாயவிலைக்கடைகள் மூலம் இந்த நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் என்ற விகிதத்தின் அடிப்படையில் வருகின்ற 23ம் தேதி வரை பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தேதி குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.

5 கொள்ளையர்கள் . . .  35 கி.மீ. சேசிங்; சினிமா காட்சிகளை மிஞ்சிய தமிழக போலீசாரின் அதிரடி வேட்டை

ஆனால், தற்போது நியாயவிலைக் கடைகளில் கூட்டமின்றி காணப்படுவதால் 21, 22, 23 ஆகிய தேதிகளுக்கான டோக்கன் வைத்திருக்கும் நபர்களும் கூட இன்றே தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் தங்களுக்கான நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெறமுடியாத நபர்கள் அடுத்தடுத்த தினங்களில் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயரதிகாரிகள் இதற்கான அறிவிப்பினை வாய்மொழியாக நியாயவிலைக் கடைகளுக்கு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!