வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்க விரைவில் வருகிறது படகு ஆம்புலன்ஸ்?

By vinoth kumar  |  First Published Dec 16, 2023, 11:52 AM IST

கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 


தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நேரங்களில் பயன்படுத்தும் வகையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் படகு ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆண்டு தோறும் மழை காலங்களில் தலைநகர் சென்னை வெள்ள நீரால் சூழ்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் ஒரு அடிக்கு மேல் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் உணவு இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

மேலும் மழை வெள்ளத்தில் சிக்கிய  136 கர்ப்பிணி பெண்கள் உட்பட 1,219 பேரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மீட்கப்பட்டனர். அதேபோல், மழை வெள்ள பாதிப்பால் ஆம்புலன்ஸ் இயக்க முடியாத இடங்களில் மீனவர்கள் உதவியுடன் படகு வாயிலாக நோயாளிகள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், இவற்றை கருத்தில் கொண்டு இரண்டு படகு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த படகு ஆம்புலன்சிற்கு, மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்துக்கும், 45 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, கூறப்படுகிறது.

click me!