சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு..!

By vinoth kumar  |  First Published Nov 11, 2023, 1:57 PM IST

தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. 


சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல, பீக் அவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனை குறைக்க வேண்டும் என சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அப்போது உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  பீக்-அவர்ஸ் கட்டணத்தை அரசு குறைத்து உள்ளது. மேலும் மின் பயன்பாட்டை பொறுத்து 15-ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தை குறிப்பிடத்தக்கது.

click me!