Online Gambling ban: தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லுமா? செல்லாதா? நீதிமன்றம் தீர்ப்பு!

Published : Nov 09, 2023, 02:29 PM ISTUpdated : Nov 09, 2023, 03:02 PM IST
Online Gambling ban: தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லுமா? செல்லாதா? நீதிமன்றம்  தீர்ப்பு!

சுருக்கம்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

திமுக அரசு அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தமிழக அரசு சட்டத்தில் உள்ள நெறிமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, சூதாட்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மேலும் ஆன்லைன் ரம்மியில் ஏற்கெனவே மோசடிக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவுக்கு நடைமுறையில் உள்ளதாகவும் கூறினர். நீதிபதி சந்துரு குழு, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் முறையிட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்ப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்;- இந்திய அரசியல் சாசன வழங்கியுள்ள அதிகாரத்தின்படியே, இயற்றப்பட்ட இந்த சட்டம் செல்லுபடியாகும். பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது. 

இதையும் படிங்க;- எனது கணவர் சொந்த ஊரு திருவண்ணாமலை! அதனால அமைச்சர் EV.வேலுவை நன்றாக தெரியும்! அசராத மீனா ஜெயக்குமார்.!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பின்னர், இருதரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!