சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய இதுதான் காரணம்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Jul 11, 2020, 2:02 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திபட்டில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின்னர் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன. தட்டுப்பாடின்றி படுக்கைகள் கிடைக்கின்றன. மாவட்டந்தோறும் கூடுதல் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், மருத்துவமனை அல்லாத பகுதிகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தொடரந்து அதிரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா சிகிச்சைக்கு இந்திய மருத்துவத்தை பயன்படுத்துகிறோம். விரும்பும் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சை தரப்படுகிறது. 12 வகையான சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. ரெம்பசிவர் மருந்து தாராளமாக கிடைக்கிறது. சென்னையில் மக்கள் மாஸ் அணிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்ததால் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. 

மேலும், பேசிய அவர் மற்ற மாநிலங்களில் மருந்து தட்டுப்பாடுகள் இருந்தாலும் அதுபோன்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. முக்கியமாக திருமண நிகழ்ச்சி மற்றும் இறுதி சடங்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பதால் யாரும் பயப்பட வேண்டாம். முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதுதான் கொரோனாவிற்கான மருந்தாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

click me!