நேற்று பிறை தெரியவில்லை.. நாளை தான் ரமலான்..! தமிழக தலைமை ஹாஜி அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published May 24, 2020, 8:22 AM IST
Highlights

தமிழகத்தில் நேற்று பிறை தெரியாத நிலையில் நாளை(25ம் தேதி) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஆகும். இறை வசனங்கள் இறக்கப்பட்ட சிறப்பு மிகுந்த ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பு தொடங்கும் இஸ்லாமிய மக்கள் நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் மாலை வரை கடைபிடித்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை திறப்பார்கள். 30 நாட்கள் கடைபிடிக்கப்படும் நோன்பின் இறுதி நாளில் பிறை தென்படுவதை அடிப்படையாகக்கொண்டு ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. அதன்படி ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து வந்தனர். நோன்பு நோற்கும் காலங்களில் இஸ்லாமியர்கள் கூட்டுத்தொகை வைப்பது வழக்கம். இந்த வருடம் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் சிறப்பு தொழுகைகளுக்கு யாரும் கூட வேண்டாம் எனவும் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சியும் விநியோக்கிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நோன்பு காலத்தின் இறுதி நாளில் பிறை தென்படுவதை அடிப்படையாக வைத்து ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் நேற்று பிறை தெரியாத நிலையில் நாளை(25ம் தேதி) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அய்யூப் தெரிவித்துள்ளார். எனினும் சில இஸ்லாமிய அமைப்புகள் நேற்றே பிறை தெரிந்து விட்டதாகவும் அதனால் இன்று தான் ரமலான் பண்டிகை என சர்ச்சைகளை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!