18 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..! சென்னை நோக்கியா நிறுவனம் இழுத்து மூடல்..!

By Manikandan S R SFirst Published May 23, 2020, 1:57 PM IST
Highlights

சென்னை அருகே இருக்கும் ஒரக்கடத்தில் நோக்கியா சொலுஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்படவே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 9,364 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 5,523 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். தலை நகரில் மட்டும் மொத்தம் 66 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர்.

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அலுவகங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு செயல்பட அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பணியாளர்களை வேலை இடங்களுக்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசு எச்சரித்தது. இந்த நிலையில் சென்னை நோக்கியா நிறுவனத்தில் பல ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

சென்னை அருகே இருக்கும் ஒரக்கடத்தில் நோக்கியா சொலுஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்படவே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனத்தை தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!