தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்த வெதர்மேன்!

By manimegalai aFirst Published May 5, 2019, 3:36 PM IST
Highlights

வெட்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வெதர்மேன், சென்னையில் மட்டும் 40 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என கூறியுள்ளார்.
 

வெட்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வெதர்மேன், சென்னையில் மட்டும் 40 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என கூறியுள்ளார்.

தற்போதைய வானிலை தகவல்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவருடைய முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். 

இவர் புதிதாக போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... 

ஃபானி புயலுக்கு பின் மேற்கில் இருந்து வரும் காற்று பலவீனம் அடைத்து விட்டதால், தமிழ்நாட்டின் உள்புற பகுதிகளில் வெட்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

நேற்றைய தினம் வேட்பசலனம் காரணமாக, திருத்தணி, சோளிங்கர் மற்றும் ராணி பேட்டை ஆகிய பகுதிகளில் மாலை - இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.  குறிப்பாக சோளிங்கரில் அதிக பட்சமாக 144 மி.மீ மழையும், ராணி பேட்டையில் 74 மி.மீ மழையும், திருத்தணியில் 12 மி.மீ மழையும் பொழிந்தது.

மேலும் இன்றைய நிலவரப்படி வெட்பசலனத்தினால், இன்று  நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூரின் உள்ளிட்ட மேற்குப்பகுதிகளில் இடியுடன், கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூர் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்புதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சென்னையை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் மட்டுமே அதிகரிக்கும் என்றும், மே மாதம் முழுவதும் 40 டிகிரிக்கு அதிகமாக வெயில் வாடி எடுக்குமே தவிர மழைக்கும் மட்டும் வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார். 
 

click me!