சென்னையில் பயங்கரம்.. பெற்ற தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த 5 வயது மகன்..!

Published : May 04, 2019, 05:03 PM IST
சென்னையில் பயங்கரம்.. பெற்ற தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த 5 வயது மகன்..!

சுருக்கம்

சென்னையில் பெற்ற தாய் கண்முன்னே தண்ணீர் லாரியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னையில் பெற்ற தாய் கண்முன்னே தண்ணீர் லாரியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தர்‌ஷன் (5), தியா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்‌ஷன் தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று காலை கீதா மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மகன் மற்றும் மகளை ஏற்றிக் கொண்டு சென்றார். 

வானகரம் சிக்னல் அருகே வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் கீதா தனது பைக்கை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றார். மீண்டும் சாலையில் ஏற முற்பட்டார். அப்போது மணலில் சிக்கியதால் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தர்சன் சாலையில் கீழே விழுந்துள்ளான். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று தர்சன் மீது ஏறியது.

 

இந்த விபத்தில் தர்சன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த தாயின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிடைய செய்துள்ளது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?