#BREAKING இந்த மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 30, 2021, 1:14 PM IST
Highlights

தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலை தடுப்பது மிகவும் சவாலாக இருக்கிறது. சென்னை, ராணிப்பேட்டை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யும் விகிதம் அதிகமாக இருக்கிறது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களும் நமக்கு சவாலாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் களப்பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தொடர்பான சந்தேக‌ங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே. 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம்  இருந்து எப்போது வரும் என தெரியாது. 

45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 1.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் கொடுத்திருந்தாலும் அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என  சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். 

click me!