அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல... பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை..!

Published : Oct 29, 2020, 03:29 PM IST
அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல...  பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை..!

சுருக்கம்

சென்னையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாதம் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாதம் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுஷ்மிதா (23). இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சுஷ்மிதா தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமான நாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆகையால், கர்ப்பத்தை கலைத்து விடுங்கள் என பலமுறை வீட்டில் இருப்பவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும் வரை வலியை பொறுத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில், பிரசவ வலிக்கு பயந்து சுஷ்மிதா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்ற அவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 

உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுஷ்மிதா உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!