#BREAKING கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து.. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்

By vinoth kumarFirst Published Oct 29, 2020, 12:13 PM IST
Highlights

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ண சந்திரனை நியமித்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ண சந்திரனை நியமித்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராக பதவி வகித்த சாருமதி, 2019 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பின் காலியான பதவிக்கு பூர்ண சந்திரனை நியமித்து, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அரசாணைக்கு  தடை விதிக்கக்கோரி,  திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கல்லூரிக் கல்வி இயக்குநராக உள்ளவர், பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அப்பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், பூர்ணசந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக, காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பூர்ண சந்திரனை விட சீனியரான என்னை, கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்திருக்க வேண்டும். அவரை,  நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன் இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால்  தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார். இன்று இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ண சந்திரன் நியமனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை கடைப்பிடித்து முறையான நியமனத்தை அடுத்த 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!