சென்னையில் 80% இடங்களில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்: தலைமை செயலாளர் தகவல்

By SG Balan  |  First Published Dec 5, 2023, 7:56 PM IST

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையும் 70 சதவீதம் சீர்செய்யப் பட்டுவிட்டது என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஷ் மீனா குறிப்பிட்டிருக்கிறார்.


மிக்ஜம் புயலால் பொழிந்த தொடர் கனமழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 80 சதவிகித பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறியிருக்கிறார்.

மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 சதவிகித இடங்களில் மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் சேவை தடையின்றி தொடர்ந்து இயங்கி வருகிறது எனக் கூறிய தலைமைச் செயலாளர், தற்போது சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மழைநீர் தேங்கியுள்ள சில பகுதிகளில் மட்டும் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையும் 70 சதவீதம் சீர்செய்யப் பட்டுவிட்டது என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஷ் மீனா குறிப்பிட்டிருக்கிறார்.

மிக்ஜம் புயலால் சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துள்ளது. சராசரியைவிட 30 சதவீத்துக்கும் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் சென்னையை கடந்து ஆந்திரவுக்கு நகர்ந்தை அடுத்து திங்கள் இரவு முதல் மழையின் தீவிரம் படிப்படியாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்) காலை முதல் வெயிலும் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

click me!