சென்னையில் எந்த பகுதிகளில் மின் விநியோகம் வந்திருக்கு தெரியுமா? மற்ற இடங்களுக்கு எப்போது வரும்! அமைச்சர் தகவல்

By vinoth kumar  |  First Published Dec 5, 2023, 9:56 AM IST

நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் நள்ளிரவு முதல் படிப்படியாக  மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


சென்னையில் இன்னும் சில மணி நேரங்களில் முழுமையாக மின் வினியோகம் சீரடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளித்தது. குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.  

Latest Videos

undefined

இந்நிலையில், நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் நள்ளிரவு முதல் படிப்படியாக  மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில் ;- சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம்  வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ்,  இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை  வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF,  இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை  தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம்,    போரூர் ஒரு பகுதி  மற்றும்     சென்னை  தெற்கு - II  மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர்,  அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின்  ஒரு பகுதி.

மேலும், சென்னையில் இன்னும் சில மணி நேரங்களில் முழுமையாக மின் வினியோகம் சீரடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

click me!