சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு... ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குப்பதிவு எனத் தகவல்!

By Asianet TamilFirst Published Sep 13, 2019, 9:21 AM IST
Highlights

நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது. 
 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரியில் அடிப்பட்டு இறங்க இளம் பெண் சுபஸ்ரீ வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. 23 வயதான சுபஸ்ரீ, கனடா செல்வதற்கான முயற்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுதொடர்பாக தேர்வு ஒன்றை எழுதிவிட்டு நேற்று மதியம் துரைபாக்கம் - பல்லாவரம் சாலை வழியாக குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே சுபஸ்ரீ வந்தபோது, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக வரவேற்பு பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

 
இதனால் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது.

 
 இந்நிலையில் இந்த வழக்கில் அனுமதியின்றி இல்லத் திருமண விழாவுக்காக பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த அவர் ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

click me!