அடங்காத ஆளுங்கட்சியினரின் அராஜகம்... கல்லூரி மாணவி மீது பேனர் சரிந்து விழுந்து லாரி ஏறி கொடூரம்..!

By vinoth kumarFirst Published Sep 12, 2019, 6:24 PM IST
Highlights

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகரின் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகரின் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னை பல்லாவரம்- துரைபாக்கம் ரேடியல் சாலையில் சுபஸ்ரீ என்ற B.Tech படிக்கக்கூடிய கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் அதிமுக பிரமுகர் திருமணத்திற்காக வழிநெடுகிலும் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டது.

 

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்த போது திடீரென சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்துள்ளது. இதனால், அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சாலை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணிகளில் ஆளுக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். 

இதுபோல அனுமதி இல்லாத பேனர்களை வைக்கக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறி பேனர் வைப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளுங்கட்சியினர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மக்களை காக்க வேண்டிய அரசே இளம் பெண் உயிரை பறித்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஆட்சியரின் அலட்சியமும், போலீசாரின் அஜாக்கிரதையும் காரணம் என கூறியுள்ளனர். 

click me!