தாறுமாறாக உயரும் பெட்ரோல் விலை..! கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!

By Manikandan S R SFirst Published Nov 24, 2019, 11:01 AM IST
Highlights

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் உயர்ந்து 77.49 ரூபாயாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் விலை தொடர் ஏற்றத்தில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் எண்பது ரூபாயை எட்டிவிடும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் பெட்ரோல் விலைக்கு மாற்றாக டீசல் விலை தொடர்ந்து இறக்கத்தில் இருக்கிறது. 1 லிட்டர் டீசல் விலை 7 காசுகள் குறைந்து 69.47 ரூபாயாக  விற்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன்காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

click me!