வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Nov 24, 2019, 10:33 AM IST
Highlights

கோவில் திருவிழாக்களின் போது பிரச்சனைகள் நிகழ்ந்தால் அதை கட்டுப்படுத்தி பாதுகாப்பு வழங்குவது தான் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பு என்றும் பிரச்சனைகளை காரணம்காட்டி இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கிறது நாராயணமங்கலம் கிராமம். இந்த ஊரில் இருக்கும் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அரசு அதிகாரிகள் கோவிலில் திருவிழா நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் வரதராஜ் என்பவர் கோவிலில் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திருவிழா நடத்துவதற்கு மேலும் தாமதமாகியிருக்கிறது.

இதனிடையே வழக்கை மீண்டும் விசாரணை செய்த நீதிபதிகள், கோவில் திருவிழாக்களின் போது பிரச்சனைகள் நிகழ்ந்தால் அதை கட்டுப்படுத்தி பாதுகாப்பு வழங்குவது தான் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பு என்றும் பிரச்சனைகளை காரணம்காட்டி இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேசி திருவிழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

click me!