தாறுமாறாக உயரும் பெட்ரோல் விலை..!

Published : Nov 17, 2019, 10:46 AM IST
தாறுமாறாக உயரும் பெட்ரோல் விலை..!

சுருக்கம்

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 13 காசுகள் உயர்ந்து 76.81 ரூபாயாக இருக்கிறது.  டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1 லிட்டர் டீசல் விலை 69.54 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் விலையில் 1 வாரத்திற்கு மேலாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!