புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்..! தமிழக அரசு உத்தரவு..!

Published : Nov 15, 2019, 05:06 PM ISTUpdated : Nov 15, 2019, 05:50 PM IST
புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்..! தமிழக அரசு உத்தரவு..!

சுருக்கம்

புதியதாக உருவாகியிருக்கும் மாவட்டங்களுக்கான காவல்துறை கண்காணிப்பாளர்களை இன்று பிற்பகலில் நியமனம் செய்து உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருக்கும் பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தென்காசி,செங்கல்பட்டு,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியாகியது.

புதியதாக உருவாகியிருக்கும் மாவட்டங்களுக்கான காவல்துறை கண்காணிப்பாளர்களை இன்று பிற்பகலில் நியமனம் செய்து உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு அருண் சுந்தர் தயானும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜான் லூயிசும், கள்ளக்குறிச்சிக்கு கிரண் குரலாவும் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவன் அருளும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திவ்யா தர்ஷினியும் மாவட்ட ஆட்சியர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்த இவர்கள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!