16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..! தமிழக அரசு அதிரடி..!

By Manikandan S R SFirst Published Nov 15, 2019, 4:48 PM IST
Highlights

தமிழகத்தில் பணியாற்றும் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது.  இதற்கு முன்பாக கடந்த ஜனவரியில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டும் ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு இருதினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அதில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே புதிய மாவட்டங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு சுகுணா சிங்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மயில்வாகனமும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயகுமாரும் எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்னர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கண்ணனும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஜெயசந்திரனையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற தமிழகத்தில் பணியாற்றும் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

click me!