எதிர்பார்த்த அளவுக்கு இந்த வருஷம் மழை இல்லை..!! காரணம் என்ன தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2019, 1:48 PM IST
Highlights

ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவான மஹா புயல், புல்புல் புயல் போன்றவற்றால் மழைக்கான வாய்ப்பு காணாமல் போனது. பருவமழை பெய்வதற்காக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு  லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தாண்டு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இல்லை என தெரியவந்துள்ளது. 

 

இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் அதிகளவு மழையை வாரி வழங்கும் என்று வானிலை வல்லுனர்கள் கணித்தனர்.ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவான மஹா புயல், புல்புல் புயல் போன்றவற்றால் மழைக்கான வாய்ப்பு காணாமல் போனது. பருவமழை பெய்வதற்காக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் 24மணி நேரத்திற்கு  லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  நகரின் ஒருசில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை 2 செ.மீ மழையும்,கோயம்புத்தூர் மாவட்டம் சூளுரில் 8 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது.

click me!