அதிர்ச்சி தரும் பெட்ரோல், டீசல் விலை.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!

Published : Sep 24, 2019, 10:55 AM IST
அதிர்ச்சி தரும் பெட்ரோல், டீசல் விலை.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!

சுருக்கம்

சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் ஏற்றத்தில் இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் ஏற்றத்தில் இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.23 காசுகள் உயர்ந்து 77.06 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.15 காசுகள் உயர்ந்து 70.91 ரூபாயாக இருக்கிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தது. எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட பாதிப்பு நீங்க ஒரு சில வாரங்கள் ஆக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரையில் விலை உயர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!