16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

Published : Sep 23, 2019, 02:58 PM IST
16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

செப்டம்பர் 25-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 16 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 25-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுதினமும் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டை மற்றும் பாலகோட்டில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடியில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!