அதிரடியாக உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.. அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்!!

Published : Sep 12, 2019, 11:27 AM ISTUpdated : Sep 12, 2019, 11:29 AM IST
அதிரடியாக உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.. அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்!!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கவலையில் இருக்கின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்கபட்டு வந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக விலை உயராமல் இருந்தது. இடையிடையே குறையவும் செய்தது. இந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னையில் இன்று +0.07 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 74.63 ரூபாயாக உள்ளது . அதே போல + 0.06 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 68.90 ரூபாயாக இருக்கிறது . 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!