லண்டன் போய் படிக்கப்போறீங்களா.. அடிக்குது யோகம்: 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சூப்பர் சலுகை

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 11:06 AM IST
Highlights

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள் வசதிக்காக 7 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்ட விசா சலுகையை இப்போது மீண்டும் இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள் வசதிக்காக 7 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்ட விசா சலுகையை இப்போது மீண்டும் இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது.

இந்த விசாவின்படி, இங்கிலாந்தில் சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பு, பட்டமேல்படிப்பு முடித்தவுடன் தாய்நாட்டுக்கு திரும்பிட வேண்டும் அங்கு வேலை செய்ய முடியாது. ஆனால், புதிய விசா சலுகையின்படி, படிப்பு முடிந்தபின், மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை தங்கி இருந்து இங்கிலாந்தில் கல்வி தொடர்பான வேலைவாய்ப்புகளை தேடலாம், வேலையும் செய்யலாம்.

ஆதலால், இங்கிலாந்தில் படித்துவரும், அல்லது படிக்க வாய்ப்பு பெறும் இந்திய மாணவர்கள் படித்து முடித்தவுடன் இந்தியா வரத் தேவையில்லை, கூடுதலாக 2 ஆண்டுகள் தங்கி இருந்து தங்கள் கல்வி தொடர்பான வேலையில் ஈடுபடலாம்.

இந்த சலுகை இந்திய மாணவர்களுக்கு மட்டுமின்றி உலக அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.  

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரஸா மே கடந்த 2012-ம் ஆண்டில் உள்துறை செயலாளராக இருந்தபோது இந்த திட்டத்தை ரத்து செய்தார். இப்போது மீண்டும அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 2020-21-ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

தற்போது இந்தியாவில் இருந்து19,750 மாணவர்கள் இங்கிலாந்தில் படித்து வருகிறார்கள். இதில் 11,255 மாணவர்கள் பட்டமேல்படிப்பும், 1,555 மாணவர்கள் ஆய்வுப்படிப்புகளிலும், 6,945 மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பிலும் இருக்கின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான திறமையான மாணவர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆய்வுப்பணி ஆகியவற்றில் ஈடுபடலாம்.

இங்கிலாந்து அரசின் இந்த திட்டத்தை இந்தியாவும் வரவேற்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்தியத்தூதர் டோமினிக் கூறுகையில், “ இந்திய மாணவர்களுக்கு அருமையான திட்டம், இனிமேல் படித்துமுடித்தவுடன் 4 மாதங்களில் நாட்டுக்கு திரும்பவேண்டியது இல்லை, அதிகமான நாட்கள் செலவு செய்து படிகப்புக்கு தகுந்த வேலை செய்யலாம்” எனத் தெரிவித்தா்.

இதற்கான முழுமையான விவரங்கள் அனைத்தும் Gov.UK என்ற இணையதளத்தில் பார்த்து அறியலாம்.

click me!