தொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!

Published : Oct 11, 2019, 11:23 AM ISTUpdated : Oct 11, 2019, 11:25 AM IST
தொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் பெட்ரோல்,13 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76.25 ரூபாயாக இருக்கிறது. அதே போல டீசல்,16 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70.35 ரூபாயாக விற்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. தினமும் 25 காசுகளுக்கு மேல் விலை உயர்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உயர்த்தப்படாத விலை இன்றும் அதிகரிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை