மக்களே உஷார்... இந்த 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!

By vinoth kumarFirst Published Oct 10, 2019, 6:02 PM IST
Highlights

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில் கடந்த 4 மாதங்களாக நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. வரும் 20-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ., பாப்பிரெட்டிப்பட்டி, நாமக்கல் பகுதிகளில் தலா 4 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

click me!