தொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..!

Published : Oct 15, 2019, 12:14 PM IST
தொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல், 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76.09 ரூபாயாக இருக்கிறது. அதே போல  டீசல், 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70.15 ரூபாயாக விற்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. தினமும் 25 காசுகளுக்கு மேல் விலை உயர்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.  இன்றும் விலை அதிகரிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!