இன்று முதல் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை... வானிலை மையம் அசத்தல் அறிவிப்பு..!

Published : Oct 14, 2019, 11:05 AM IST
இன்று முதல் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை... வானிலை மையம் அசத்தல் அறிவிப்பு..!

சுருக்கம்

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    

இன்று  முதல் வரும் 18ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதால், தமிழகம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று முதல் 18ம்தேதி வரை தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை