சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா என்பவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் தனது கையில் போடப்பட்டிருந்த குல்கோஸ் ஊசியினை அகற்றக் கோரி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க;- சேலத்தில் லாரியை முந்த முயன்றபோது விபத்து; ஆம்னி பேருந்தில் பயணித்த 10 பேர் படுகாயம்
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலாஜி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பயிற்சி மருத்துவர் சூர்யா கழுத்தில் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளியால் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 4 இளம்பெண்கள்.. ஒரு நைட்டுக்கு இவ்வளவு வா?
இந்த சம்பவத்தை அறிந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறியதோடு, உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் கைவிட்டனர். போராட்டம் நடைபெற்ற சமயத்தில் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.