அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து அவர்கள் தீடீர் போராட்டத்தில் இறங்கினர்.
தொழிற்சங்கங்கள் எதுவும் பொறுப்பேற்காத நிலையில் ஓட்டுநர்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொ.மு.ச. பேரவை உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று அறிவுறுத்தி ஓட்டுநர்கள் மீண்டும் பேருந்தை இயக்கக் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
undefined
சென்னை மாநகரில் உள்ள 33 அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் 10 பணிமனைகளில் தனியார் மூலம் தற்காலி ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க போக்குவரத்துத்தறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை எதிர்த்து போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தியுள்ளன.
ஆனால், இன்று மாலை ஆலந்தூர், கே.கே.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தன்னிச்சையாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், சுமார் ஒரு மணிநேரம் வழக்கமாக நேரத்தில் பேருந்துகள் வராததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் பற்றி கருத்து தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்தப் பிரச்சினை குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மூளைச்சாவுக்குப் பின் உடலுறுப்பு தானம் மூலம் 3 நகரங்களில் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!