இனி திருமணங்களுக்கு செல்ல இ-பதிவு கிடையாது... அரசு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 17, 2021, 5:53 PM IST
Highlights

தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 
 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு  பகுதியாக மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க கூட இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

இ-பாஸ் நடைமுறையின் போது திருமண பத்திரிகையை ஆவணமாக சமர்ப்பிப்பதன் மூலமாக மாவட்ட விட்டு மாவட்டத்திற்கு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய அரசு இ-பாஸ் முறையை இ-பதிவாக மாற்றிய நிலையில் அதில் திருமணத்திற்கான அனுமதி இல்லாத மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

தமிழகத்தில் திருமணத்திற்காக அதிகம் பேர் இ-பதிவு முறையில் விண்ணப்பித்து பயணித்து வருவதால், தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!