கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்... சுகாதாரத்துறை செயலர் அதிரடி..!

Published : May 17, 2021, 03:00 PM IST
கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட  8 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்...  சுகாதாரத்துறை செயலர் அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. 

இடமாற்றப்பட்டவர்களின் விவரம்;-

*  மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!