குட்நியூஸ்.. ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்.!

By vinoth kumarFirst Published May 17, 2021, 12:51 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றுக்கொண்டிருந்தது. இதனை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊடங்கும் அமல்படுத்தப்பட்டது. 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சென்னையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மே 11ம் தேதி சென்னையில் 7,466 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 12ம் தேதி அதிகபட்சமாக 7,564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு சென்னையில் தொடர்ந்து குறைந்தே வருகிறது. தலைநகரில் நேற்று முன்தினம் 6,640 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், நேற்று  சென்னையில் 6,247 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 0.7% குறைந்துள்ளது. அதேபோல கொரோனா பாசிடிவ் விகிதம் 20% ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதை பாசிடிவ் விகிதமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!