உச்சக்கட்ட அலர்ட்... 145 கி.மீ வேகத்தில் கடும் சூறாவளி காற்று... உஷாரா இருக்க சொல்லும் வானிலை மையம்..!

By vinoth kumarFirst Published Nov 25, 2020, 11:52 AM IST
Highlights

தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்;- வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள நிவர்' இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புயல், கடலூரிலிருந்து 290 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகரும் புயலானது, கரையை கடக்கும் போது , அப்பகுதிகளில் மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆகையால், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 140 கிமீ வரையில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. 

click me!