24 மணிநேரத்தில்... தமிழகத்தின் 17 மாவட்டவங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

By manimegalai aFirst Published Aug 3, 2020, 12:38 PM IST
Highlights

தெற்கு ஆந்திரா மற்றும், கர்னாடக பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழச்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் பலத்து மற்றும் மிதமான மழை பொழிய வாய்ப்பிருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழட்சியால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுற்றுள்ளது. இதனால் கர்நாடகா, ஆந்திர, கேரளா மற்றும் சில தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில், திருவள்ளூர், வேலூர், கடலூர், கோவை, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமானது முதல், மிதமானது வரை, அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நேற்று 24 மணிநேரத்தில் தமிழத்தில் பள்ளிப்பட்டு திருத்தணி, ஆகிய இடங்களில் தலா  7 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாறு, பந்தலூர் ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டர் மழையில், சோளிங்கர், சோலையாறு, செருமுள்ளி ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!