அடுத்த 24 மணி நேரத்தில் , மொத்தம் 12 மாவட்டங்களில் அடித்து ஊத்தப் போகுது...!! கடலோர மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2019, 1:43 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ,  தேனி , திண்டுக்கல் ,  நீலகிரி ,  கோயம்புத்தூர் ,  உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .  தமிழகத்தில்  8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  

குறிப்பாக திருநெல்வேலி,  தூத்துக்குடி ,  கடலூர் , நாகப்பட்டினம் ,  தஞ்சாவூர் ,  திருவாரூர் ,  அரியலூர் ,  பெரம்பலூர் ,  மாவட்டங்களி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் நவம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல்  மிதமானது வரை மழை பெய்யும் என்றும்,  19,  20ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .  சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  சில இடங்களில் லேசான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ,  தேனி , திண்டுக்கல் ,  நீலகிரி ,  கோயம்புத்தூர் ,  உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அத்துடன் கடலோர மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  எனவே மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.டி.ஓவில் 15 சென்டிமீட்டர் மழையும்,  குன்னூர் டவுனில் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 
 

click me!