மகளின் திருமணத்திற்காக 2-வது முறையாக மனு... நளினிக்கு இரக்கம் காட்டாத உயர்நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Sep 12, 2019, 11:30 AM IST
Highlights

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு அளிக்கப்பட்ட பரோலை 2-வது முறையாக நீட்டிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு அளிக்கப்பட்ட பரோலை 2-வது முறையாக நீட்டிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து தங்களை இவ்வழக்கில் விடுதலை செய்ய கோரி 7 பேரும் பல்வேறு முற்சிகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு அளித்திருந்தார். அதன்படி கடந்த 5-ம் தேதி நிபந்தனைகளுடன் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 30 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். இவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்திருந்தது. 

இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்று பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தமிழக அரசு கைவிரித்த நிலையில், நீதிமன்றம் 3 வார காலம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 

இந்நிலையில், 2-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பரோலை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டது. 

click me!