சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஒரு மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கிழக்கு மாட வீதியில் இருக்கக்கூடிய வாயிலில் நீண்ட நேரமாக மர்ம நபர் ஒருவர் அமர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
பின்னர் திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை தரையில் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த பெட்ரோலை சிறுக சிறுக ஊற்றியதால் தீ கொழுந்துவிட்ட எறிய ஆரம்பித்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்தார். இதுதொடர்பான வீடியோ அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கமல் வாங்கி கொடுத்த காரில் இருந்து கொண்டு பெண் ஓட்டுநர் ஷர்மிளா இப்படி செய்யலாமா? 3 பிரிவுகளின் கீழ் வழக்கு!