சென்னை மாநகராட்சி பாதசாரிகள் வசதிக்காக வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை சந்திப்பில் இருந்து ஜி.ஏ. சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் நடைபாதை அமைக்கம் பணி ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது.
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான எம்சி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மாநகராட்சி பாதசாரிகள் வசதிக்காக வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை சந்திப்பில் இருந்து ஜி.ஏ. சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் நடைபாதை அமைக்கம் பணி ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது.
undefined
இதையும் படிங்க: ஆற்றங்கரையோரம் கிடந்த மனித உடல்பகுதி.. வெற்றி துரைசாமியின் நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஸ்டான்லி சுரங்கப்பாதையில் இருந்து எம்.சி. சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவெற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் ஜி.ஏ. சாலையிலிருந்து எம்.சி. சாலையினை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.