மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம்.. கிளாம்பாக்கத்தில் தொடக்கம்.. எந்த தேதியில் இருந்து தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 31, 2024, 6:51 AM IST

60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும். 


கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 30.12.2023 அன்று புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அப்பாடா.. இனி சில்லரை சண்டையே இருக்காது.. சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ டிக்கெட் வசதி.!

இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை TAYPT (ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை MST (மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை) மற்றும் 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை SCT(ஒவ்வொரு மாதமும் 11ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும். 

இதையும் படிங்க:  தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸில் போறீங்களா.?இனி கோயம்பேடுக்கு போகாதிங்க...கிளாம்பாக்கத்திற்கே செல்லுங்க-விவரம் இதோ

மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!