சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் ராஜ்பவன் என்று அழைக்கப்படும் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இன்று ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியதாகவும், இதனால் பயங்கர சத்தம் உண்டானதாகவும் பொதுமக்கள் கூறினர்.
அங்கு பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் ஈடுபட்ட காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்துள்ளது.
undefined
அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆரியமும் திராவிடமும் இல்லை என்ற ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கட்சியின் பெயரிலேயே அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வுக்கு எதிரான போர்ட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள் மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கு தந்துவிடுகிறேன். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம்.
“நீட் விலக்கு நம் இலக்கு” என்ற கையெழுத்து இயக்கம் நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் மக்கள் இயக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டு திமுகவின் கிளைச் செயலாளர்கள் கூட அஞ்சமாட்டார்கள். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக் கொள்ளாது” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..