காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் மூடப்படும்... எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மெய்யநாதன்!!

By Narendran SFirst Published Dec 22, 2022, 5:14 PM IST
Highlights

காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் அவை முழுமையாக மூடப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் அவை முழுமையாக மூடப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மாதம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார், இதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பது அரசின் நோக்கம். இதற்கென 500 கோடி ஒதுக்கி இந்த ஆண்டு 73 கோடிக்கு அனுமதி தந்துள்ளார். தமிழ்நாட்டில் கடற்கரை 1076 கி.மீ நீளம் கொண்டது, 16 கடற்கரையோர மாவட்டங்களில் 500 கிலோ மீட்டர் பரப்பளவு அளவிற்கு,  கடல் அரிப்பு போன்றவற்றை தடுப்பதற்காக மண்சார்ந்த பனை, புங்க, வேப்ப மரங்களை நடவு செய்கிறோம். தமிழ்நாட்டில் வனப்பரப்பை 23.8 லிருந்து 33 சதவீதமாக உயர்த்த பசுமைத் தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காப்புக்காடு, பறவைகள் சரணாலயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்க கூடாது என சட்டம் இருக்கிறது, இதற்கு முன்பு யாரும் குவாரி அமைத்திருந்தல் அவை முழுவதுமாக மூடப்படும். காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்க தமிழகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. அனைத்து துறை அமைச்சர்களின் கூட்டு முயற்சியால் காலநிலை மாற்ற செயல்பாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையில் உள்ள வனப்பாதுகாவலர்களுக்கு வாகனங்கள் மின்சார வாகனங்களே வாங்கப்பட்ட உள்ளன.

இதையும் படிங்க: நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 5 தொழிலாளர்கள் படுகாயம்..!

சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு வாங்கும் புதிய பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். ஆட்சியில் இல்லாதபோதே சுற்றுச்சூழலை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஸ்டாலின். சுற்றுச்சூழல் துறையை பெயர் மாற்றி காலநிலை மாற்றத்துறை என பெயர் வழங்கியுள்ளார் முதலமைச்சர். இந்தியாவில் ஒரு கட்சியில் சுற்றுச் சூழல் அணி என பெயர்  இருப்பது திமுகவில்தான். அரசு மட்டும் பசுமைப் பரப்பை அதிகரித்துவிட முடியாது, தமிழ்நாட்டில் 1.30 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 31,199 சதுர கிலோ மீட்டர் அளவு மட்டுமே வனப்பரப்பு இருக்கிறது. மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில்  42,919 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் 13,500 ச.கிலோமீட்டர் வரை வனப்பரப்பு குறைவாக இருக்கிறது. ஆண்டுக்கு 10 கோடி மரம் நடவு செய்து 9 சதவீதம் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டில் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவு உயராமல் கட்டுப்படுத்த மரங்களை நடவு செய்தால் மட்டும் போதாது, நிறைய கட்டுப்பாடுகள் வேண்டும். மின்சாரத்திற்கு மாற்றாக சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரங்களை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் 17, 500 மெகாவாட் மின்சாரம் நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: உதயநிதி நாட்டுக்காக என்ன செய்தார்.!நயன்தாராவை கட்டிப்பிடித்தார்,ஹன்சிகாவை காதலித்தார்- செல்லூர் ராஜூ விமர்சனம்

அனைவரும் அன்றாடம் 1 யூனிட் அளவு மின்சாரத்தை சிக்கனப்படுத்த முன்வர வேண்டும். சென்னையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது, முழு கேரளத்திலும் இந்தளவுதான் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் 32 கோடியில் காய்கறிக் கழிவுகளை  மேலாண்மை செய்வதற்கான பணி நடைபெறுகிறது. 2050ல் 2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை உயர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும், இதன் காரணமாக ரேடார் பயன்பாடு நின்றுபோகும், அலைபேசிகளை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். காலநிலை மாற்றத்தால் முதலில் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்பட்டு, பிறகு விலங்குகள், பல்லுயிர்கள், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு 176 பிளாஸ்டிக் கம்பெனிகள் மூடப்பட்டு, 110 கோடி பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும், பிளாஸ்டிக் அழிய 4,500 ஆண்டுகள் வரை ஆகும். மீண்டும் மஞ்சப் பை திட்டம் போன்ற அரசின் நடவடிக்கையால் பிளாஸ்டிக்  பயன்பாட்டில் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

click me!