இந்த அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..

By Ramya s  |  First Published Dec 2, 2023, 5:06 PM IST

புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக சில அறிவுறுத்தல்களை சென்னை காவல்துறை வழங்கி உள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக அடுத்து வரும் 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  டிசம்பர் 3-ம் தேதி சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். எனவே 4,5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக சில அறிவுறுத்தல்களை சென்னை காவல்துறை வழங்கி உள்ளது. அதன்படி, புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பார்த்து அச்சப்பட வேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் மிரட்ட போகும் கனமழை.. சென்னை மக்களே வெளியே வராதீங்க.. வந்தது புயல் எச்சரிக்கை..

கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. கடல் அலை அதிகரிப்பு காரணமாக என்பதால் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இடி மின்னலும் மழை பெய்யும் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மின்கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது கட்டமைப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். விழுந்து கிடக்கும் கம்பிகள் அல்லது கம்பிகளைத் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!