படியில் பயணம் நொடியில் மரணம்... பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவன்..!

By vinoth kumarFirst Published Dec 11, 2019, 12:49 PM IST
Highlights

சென்னையில் கல்லூரி மாணவர்கள் தினமும் நூற்றுக்கணக்கான பேர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். அப்படி பேருந்தில் வரும் கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டில் பயணம் செய்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். உங்களுக்கு நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்யும் நடவடிக்கையில் சில ஈடுபடும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  

சென்னை தி.நகரில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் கல்லூரி மாணவர்கள் தினமும் நூற்றுக்கணக்கான பேர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். அப்படி பேருந்தில் வரும் கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டில் பயணம் செய்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். உங்களுக்கு நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்யும் நடவடிக்கையில் சில ஈடுபடும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.   

இந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சரண் என்ற மாணவர், சென்னை தி.நகர் பணிமனையில் இருந்து பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். வேளச்சேரியைச் சேர்ந்த சரண் படியில் தனது நண்பர்களுடன் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து தி.நகர் பணிமனைக்குள் நுழையும் போது படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் கீழே குதித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவன் சரண் என்பவரும் படியில் இருந்து கீழே குதிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் சரண் சம்பவ இடத்திலேயே துடிதடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாநகர பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!