சென்னைக்கு வரும் அத்திவரதர்..! பரவசத்தில் பக்தர்கள்..!

By Manikandan S R SFirst Published Dec 10, 2019, 3:33 PM IST
Highlights

சென்னையில் இருக்கும் கோவில் ஒன்றில் அத்திவரதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 வருடங்களுக்கு பிறகு அத்திவரதர் கடந்த ஜூலை மாதம் வெளிவந்தார். 48 நாட்களுக்கு சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு ஆகஸ்ட் 17 ம் தேதி அனந்தசரஸ் குளத்தின் உள்ளே அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட்டார்.

இனி 40 வருடங்களுக்கு பிறகு 2039 ல் தான் அத்திவரதர் வைபவம் நடைபெறும் என்பதால் 48 நாட்களிலும் கோடிக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். அதன்பிறகு நடந்த நவராத்திரி விழாவில் அத்திவரதர் பொம்மைகள் பெருமளவில் விற்கப்பட்டன. இந்தநிலையில் சென்னையில் இருக்கும் ஒரு கோவிலில் அத்திவரதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் இறச்சல்குளத்தில் அத்திமரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 சிற்ப கலைஞர்கள் 3 மாதத்தில் 8 அடி உயர அத்திவரதர் சிலையை வடிவமைத்துள்ளனர். இந்த சிலை சென்னையில் இருக்கும் ஆசிரமம் ஒன்றில் கட்டப்படும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனிடையே சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அத்திவரதர் சிலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

click me!