தண்ணீரை சேமிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் பயணிகள்!

By manimegalai aFirst Published May 28, 2019, 2:04 PM IST
Highlights

சென்னையில் உள்ள மக்களின் புதிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது, சென்னை மெட்ரோ ரயில். சுகாதாரமான சூழ்நிலை, புகை மாசு இல்ல பயணம், ட்ராபிக்கில் நின்று நேரம் வீணடிக்க வேண்டாம் என எண்ணுபவர்களின் முதல் தேர்வு மெட்ரோ ரயிலாக தான் இருக்கிறது.
 
ஆனால் கட்டணம் மட்டும் அதிகம் என்பதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர், மெட்ரோ ரயில் பயணத்தை தவிர்த்து விடுகிறார்கள்.

மேலும் மாலை நேரங்களில், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. சில சமயங்களில் மெட்ரோ ரயில் ஆட்கள் யாரையும் ஏற்றாமல் கூட சென்று வருகிறது. இதனால் ஏகப்பட்ட நஷ்டம். 

பத்தாத குறைக்கு, சென்னையில், தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. மெட்ரோ ரயிலில் இயங்கும் ஏசிக்கு மட்டுமே, ஒரு நாளைக்கு 9000 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை படுவதாகவும், எனவே மத்திய நேரங்களில் ஏசி வசதியை துண்டிக்க முடிவு செய்துள்ளதாம் மெட்ரோ நிர்வாகம். இதனால் 30 சதவீத தண்ணீர் உபயோகம் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மத்திய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அப்போது பயணிக்கும் பயணிகள் இந்த முடிவால் அதிருப்தியடைத்துள்ளனர். அட அவர்கள் பயணிப்பதே இந்த குளு குளு ஏசி பயணத்திற்கு தானே... பின்ன இந்த கவலை இருக்காதா என்ன? 

click me!