சூதாட்ட வழக்கில் சிக்கிய போலீசார்!- சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு

Published : May 28, 2019, 12:13 PM ISTUpdated : May 28, 2019, 12:31 PM IST
சூதாட்ட வழக்கில் சிக்கிய போலீசார்!- சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரகசியமாகச் சென்ற போலீசார் வீட்டின் கதவை திறந்து அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.  

அப்போது அங்கு 9 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 5 பேர் போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டுகள் சிவசங்கர், ஏழுமலை, போலீஸ்காரர்கள் சந்திரசேகர், அஸ்மத் மற்றும் பிரேம்குமார், ரவி, ஜானகிராமன், ரகுமான் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க வேண்டிய போலீசாரே சூதாட்ட வழக்கில் சிக்கியிருப்பது, சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!