சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 160 பேர்.! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jan 18, 2024, 9:47 AM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 148 பயணிகள், பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் 14 உட்பட 160 பேருடன் புறப்பட தயாராக தயாரானது. 


சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டதால் 160 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 148 பயணிகள், பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் 14 உட்பட 160 பேருடன் புறப்பட தயாராக தயாரானது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- பொங்கல் விடுமுறை முடிந்து தலைநகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துபோன சென்னை.!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் முன்கூட்டியே கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 148 பயணிகள் உட்பட 160 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

click me!